சிம் கார்டு மோசடிகளை தடுக்க டிராய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . அந்த வரிசையில் சிம் கார்டு எண்ணை மாற்றாமல் வேறொரு நெட்வொர்க் மாற வழிவகை செய்யும் MNP விதியில் மார்ச் 14ஆம் தேதி திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த விதி வருகின்ற ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என டிராய் அறிவித்துள்ளது. இந்த புதிய விதியின் படி சிம்கார்டு காலாவதி ஆவதற்கு குறைந்தது 7 நாட்கள் முன்பே வேறு நெட்வொர்க் மாற அனுமதிக்கப்படும்.