உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். தீபக் என்ற இளைஞரை சிறுமி காதலித்து வந்துள்ளார். சிறுமியை தீபக்கின் அறையில் அடைத்து வைத்து அவரது நண்பர்கள் ஆகாஷ், ஜதின், மற்றொரு 17 வயது சிறுவன் ஆகியோர் 10 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியை விடுவிக்க பணம் கேட்டுள்ளனர். இவர்களுக்கு அஞ்சனா சவுத்ரி என்ற பெண் உதவி செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.