சிவகார்த்திகேயன் மகனை, ‘அயலான்’ பட இயக்குநர் ரவிக்குமார் நேரில் சந்தித்துள்ளார். சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் 3ஆவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில், பவன் என பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் வீட்டிற்கு தனது மகளுடன் சென்ற ரவிக்குமார், குழந்தையை நேரில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன. இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, “சகோதரர் எஸ்.கே மற்றும் எனது குழந்தைகளுடன் மறக்க முடியாத தருணம். நறுமுகை அவரைச் சந்திக்க மிகவும் உற்சாகமாக இருந்தது” என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.