நடிகர் கமல் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன்-2’ படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் புரோமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அந்நிகழ்வில் ஷங்கரிடம் அவரது ஆஸ்தான திரைக்கதை ஆசிரியரான சுஜாதா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சுஜாதா எனக்கு தந்தை மாதிரி, அவர் என்னை தனது மகன்போல நடத்துவார். அவரை மிஸ் செய்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.