உத்தரகாண்ட் ரிஷிகேஷில் பத்ரிநாத் சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ருத்ர பிரயாக் பகுதியில் சென்ற போது டெம்போ ட்ராவலர் வேன் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த 17 பேரில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்பு படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.