நடிகர்களின் பிறந்தநாளன்று அவர்களின் பழைய படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 23ஆம் தேதி அவர் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான ‘வேல்’ படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிராமத்துக் கதையில் உருவான இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.