வங்கி அதிகாரிகளின் விபரங்கள் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வங்கி அதிகாரிகளின் பெயர் பட்டியல் பான் கார்டு விவரத்தை கேட்ட செந்தில் பாலாஜியின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகள் பெயர்களை கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூன் 19ஆம் தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். வழக்கிலிருந்து விடுவிக்க கூடிய செந்தில் பாலாஜி மனு மீது வரும் 19ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படாததால் ஓராண்டை கடந்தும் சிறையில் உள்ளார்