செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, நுரையீரல் சிறப்பு நிபுணர்கள் சிகிச்சையளித்து வருவதாகவும், நெஞ்சுவலி மற்றும் மூச்சுவிட சிரமப்படுவதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.