சென்னை மற்றும் பெங்களூரு விரைவு சாலை பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது வரை 62% பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறிய அவர், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும்போது சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண தூரம் வெகுவாக குறையும் என்றும் கூறப்படுகிறது.