கேஸ் சிலிண்டர் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் வருகின்ற ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா அறிவித்துள்ளார். சிலிண்டர் பதிவு செய்வதிலும் விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகார்கள் தொடர்பாக அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோர்களை கொண்டு மாலை 4 மணிக்கு குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது