தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தோல் நோய் பிரிவில் சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 20 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜப்பானிலிருந்து ரிபிக்ஸ் பீட்டா குளுக்கான் என்ற மருந்தை வரவழைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் 2 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலே முதல் முறையாக சொரியாசிஸ் நோய் சிகிச்சையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வெற்றி அடைந்துள்ளது.