திமுக அரசின் நல்லாட்சிக்கு விக்கிரவாண்டி நற்சான்றிதழ் வழங்கியதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். தமிழக மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதை இடைத்தேர்தல் வெற்றி காட்டுவதாகவும், வாக்காளித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். திமுக ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டதாகவும், அதிமுக ஒதுங்கி நின்று கள்ளக் கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.