சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய, உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜாமினில் வெளியே இருந்தால், குற்றங்களை அவர் தொடர்ந்து செய்வார் என்ற அமலாக்கத்துறையின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் ஜாமின் உத்தரவு சரியே என்றும் கூறியுள்ளது. ராஞ்சியில் 8.8 ஏக்கர் நிலத்தை அவர் அபகரித்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.