இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வாங்கும் முன்பு பிரிட்டனின் காலனியாதிக்கத்தில் இருந்தது. பிரிட்டிஷ் அரசினர் கிறிஸ்தவர்கள் என்பதால் தேவாலயம் செல்ல ஏதுவாக அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தியர்களுக்கு விடுமுறை இல்லை. பிறகு நாராயண் மொகாஜி என்பவரின் தொடர் போராட்டத்தால் 1890 ஆம் ஆண்டு ஜூன் முதல் இந்தியர்களுக்கு விடுமுறை தரப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.