டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதை பற்றி 10 ஆண்டுகள் கவலைப்படாத இபிஎஸ், இப்போது அறிக்கை விடுவது ஏற்புடையதல்ல என்று அமைச்சர் முத்துசாமி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆன்லைன் டெண்டர் முறை இருந்ததா என கேள்வி எழுப்பிய அவர், மதுக்கூடங்களுக்கு ஆன்லைன் டெண்டர் விடப்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் முடிவெடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.