ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து பார்த்திபனூர் வழியாக வீரசோழனுக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற டிப்பர் லாரி டிரைவர் சாலையின் குறுக்கே டூவீலர் சென்றதால் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து, டிப்பர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்ஸின் முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 2 பேர் சிறிய காயமடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.