அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயகக் கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், இன்றிரவு, எங்கள் கட்சியின் வேட்பாளராக ஆவதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன்.
அடுத்த சில மாதங்களில், நான் நாடு முழுவதும் பயணம் செய்வேன், அமெரிக்காவில் உள்ள அனைத்தையும் பற்றி பேசுவேன். எங்கள் கட்சியையும் நாட்டையும் ஒன்றிணைத்து, டொனால்ட் டிரம்பை தோற்கடிக்க நான் முழுமையாக உத்தேசித்துள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.