தெற்கு சீனாவின் குவாங்சி ஜூவாங் என்ற இடத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தந்தை ஒருவர் தனது 3 வயது மகள் ஜியாஜியாவை சாப்பிட வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் அதிக நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்த தந்தை, குழந்தையின் கையில் வெற்று கிண்ணத்தை கொடுத்து அதில் கண்ணீரை நிரப்புமாறு தண்டனை கொடுத்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் பெற்றோரின் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.