டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து தேசிய தேர்வு முகமை அலுவலத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், சிலர் அலுவலகத்தின் உள்ளே நுழைய முயன்றதால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்