பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட தக்காளி விலை தற்போது சரிந்துள்ளது. விளைச்சல் அதிகரித்த நிலையில் அறுவடை பணிகள் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிலோ 70 ரூபாய் வரை விற்பனையான தக்காளி தற்போது 38 ரூபாயாக சரிந்துள்ளது. தொடர்ந்து வெளிச்சந்தையில் 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.