மதுரையில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டும் மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.600-ஆக உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களாக ரூ.400க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகைப் பூ, இன்று ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிச்சிப் பூ ரூ.500, முல்லைப் பூ ரூ.300, செவ்வந்தி ரூ.120, ரோஜா ரூ.120, அரளி ரூ.150, சம்பங்கி ரூ.100-க்கு விற்பனையாகிறது. தக்காளி விலை உயர்வை தொடர்ந்து மல்லியை பூ விலையும் உயர்ந்துள்ளது.