சென்னையில் நேற்று ₹54,400க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கம், இன்று ₹240 குறைந்து ₹54,160க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,800 ஆக இருந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ₹30 குறைந்து ₹6,770க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ₹99க்கு விற்கப்படுகிறது. தங்கம் வாங்குவதை சீன மத்திய வங்கி நிறுத்தியதே விலை குறைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.