விராட் கோலி தனி விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மும்பையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்த உடன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்திக்க அவர் லண்டன் புறப்பட்டு சென்றார். கடந்த ஒரு மாதமாக கோலி குடும்பத்தினர், லண்டனில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.