தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தக் கூடாது. மேலும் தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்க அனுமதி வழங்கக்கூடாது. தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் பட்சத்தில் அவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியில் இயங்கும் பல்கலைக்கழகங்களை கபளீகரம் செய்துவிடும் என்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சி பேரவை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.