சென்னை தனியார் பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு இன்று அதிகாலை 1.55 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலாப்பூர் லஸ் கார்னர் வித்யா மந்திர், பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் காலை முதல் சோதனை ஈடுபட்டு வந்த நிலையில் அது புரளி என்று தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றனர்.