அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது. இந்நிலையில், பிரிட்டனில் நடந்த தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு பட பிரிவில் விருது வென்றுள்ளது. உலக அளவில் வெளியான 7 படங்களுடன் போட்டியிட்டு கேப்டன் மில்லர் திரைப்படம் விருதை பெற்றுள்ளது. இதனை, படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்