தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24க்கு பதில் 20ஆம் தேதியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலில் அறிவிப்பு வெளியானதால் பேரவை முன்கூட்டியே தொடங்கப்படுகிறது.
ஜூன் 24ஆம் தேதிக்கு பதில் 20ஆம் தேதியே சட்டப்பேரவை கூட்டத்துடன் தொடங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக ஜூன் 20 ஆம் தேதி சட்டப்பேரவை தொடங்கும் என்றும், விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பட் நாளை காலை 11 மணிக்கு பதவி ஏற்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.