அரசியல் ஆதாயத்திற்காக ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பட்ஜெட்டைக் காரணம் காட்டி, ‘நிதி ஆயோக்’ கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி தமிழக மக்களின் நலனை புறக்கணிக்கிறார். தேவையானதை நேரில் சந்தித்து, விவாதித்து பெற வேண்டுமே தவிர உள்நோக்கத்துடன் செயல்படக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.