‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டியில் அமைந்துள்ள திடலில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்குதான் 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இங்கு மாநாடு நடத்தி எதிர்க்கட்சி தலைவர் ஆனார். இந்நிலையில் ‘சென்டிமென்டாக’ விளங்கும் சேலத்தில் முதல் மாநாடு நடத்தினால் வெற்றிகிட்டும் என்ற நம்பிக்கையில் அங்கு நடைபெற உள்ளதாம்.