தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம், தென்மேற்கு, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.