தமிழகத்தில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 7,200 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ள நிலையில் 100 பேருந்துகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்துக்கு 200 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.