விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்ற முதியவர் ஜெயராமன் உயிரிழந்துள்ளார். டி. குமாரமங்கலம் பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து அவர் உட்பட 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி விவகாரம் நடந்து முடிந்த சில நாட்களில் அதே போன்று சம்பவம் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது