தமிழகத்தில் ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடுத்தர மக்களின் சொந்த இல்லம் கனவை நனவாக்க தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆன்லைனில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டடம் கட்ட அனுமதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2500 சதுர அடி வரை உள்ள மனையில் 3500 சதுர அடியில் கட்டப்படும் வீடுகளும் இந்த திட்டம் பொருந்தும்.