விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வருகின்ற 10ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8, 9, 10 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளும் மூட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.