தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 9:00 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.