பி எஸ் வி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள வி.கே.சசிகலா, தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதாகவும் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது தான் திமுகவின் சாதனையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.