தமிழகத்தில் காலை 10 மணி வரை ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி கோவை திருப்பூர் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.