இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் 20% அரசு பேருந்துகள் மட்டுமே உள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் சிறு கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ளதாக கூறினார். மேலும் நெருக்கடியான நிலையில் இருந்த போக்குவரத்து துறைக்கு முதல்வர் ஸ்டாலின் புத்துயிர் அளித்ததாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.