நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 39 மற்றும் புதுச்சேரி 1 என மொத்தமுள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறியவர்களை காணவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மழைக்கால தவளை போல் கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே சென்றார் என்று கேள்வி எழுப்பிய அவர், திராவிட இயக்க பூமியில் ஒருபோதும் பாஜக காலூன்ற முடியாது என்றார். மேலும் திமுக அரசின் நலத்திட்டங்களுக்கு மக்கள் அளித்த மதிப்பெண்ணே நாடாளுமன்ற தேர்தல் வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்.