தமிழகத்துக்கு நாளை முதல் தினந்தோறும் 8,000 கன அடி காவிரி நீரை திறக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், ஜூலை இறுதி வரை தினந்தோறும் 1 டிஎம்சி நீரை திறக்க ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என கூறி வந்த கர்நாடகா, ஒழுங்காற்று குழுவின் உத்தரவால் நீரை திறக்க திட்டமிட்டுள்ளது.