தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து, வாசிப்பு மற்றும் அடிப்படை கணித திறனை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி திறன் குறைந்த மாணவர்களை மேம்படுத்தும் வகையில் செயல் திட்டம் உருவாக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை தலைமை ஆசிரியர் மேற்கொண்டு எம்எஸ் தளத்தில் பதிவேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.