தமிழகம் முழுவதும் 2000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதில் 547 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது என்று அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. “TN” பதிவெண்ணாக மாற்ற வழங்கப்பட்ட கெடுவானது நேற்றோடு நிறைவடைந்தது.
இதனால் இனி வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்க போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த 547 பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.