தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஜூலை 25ஆம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.