தமிழகத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் பொறியியல் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. BE முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கிய பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.