சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் ஐம்பெரும் விழா நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். பள்ளிகளில் 21,000 ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும், 600 ஸ்மார்ட் வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ₹ 1000 உதவித்தொகை வழங்கப்படும். மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. புதுமைப் பெண் திட்டம் போல் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கும், மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த 43 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்படும்.. வகுப்பறையை குழந்தைகளுக்கு பிடித்தபடி வண்ணமயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளவில் சவால் விடும் வகையில் வளர வேண்டும் என்பதே என் ஆசை. பள்ளிக்கல்வி நிகழ்ச்சியில் எப்போதும் நான் ஆர்வத்துடன் கலந்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.