தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 1968ம் ஆண்டு தமிழ்நாடு எஎன்று ன பெயர் சூட்ட தீர்மானம் கொண்டு வந்த ஜூலை 18 ஆம் தேதியை தமிழர்கள் மாநில நாளாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம் சட்டமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரையை தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்திருக்கிறார். திமுக அரசு வந்த பின்னர் தான் தமிழ்நாட்டிற்கு பெயர் மாற்றம் வர வேண்டும் என்று இருக்கிறது என அண்ணா பேசும் அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.