தமிழ்நாட்டில் கழுகுகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதால், தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுகிறதா? என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கால்நடைகளுக்கு தடை செய்யப்பட்ட NIMUSLIDE, FLUNIXIN, CARPROFEN ஆகிய மருந்துகளை செலுத்துவதாகவும், மருந்து செலுத்தப்பட்ட விலங்குகள் இறந்தபிறகு, அவற்றின் மாமிசத்தை சாப்பிடும் கழுகுகள் அதிகளவில் உயிரிழப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.