நடிகர் விஜய் தற்போது ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இவரது அடுத்த படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தி, தெறி மற்றும் மெர்சல் என இதற்கு முன் 3 படங்களில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில்
உள்ளனர்.