தாக்குதல் போன்ற தவறான சம்பவங்களில் ஈடுபடும் சட்ட கல்வி மாணவர்கள் சீர்மிகு சட்டப் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிறரை தாக்குவது என்பது சட்டத்தை கையில் எடுப்பதாகும். சட்டப் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற செயல்கள் ஏற்புடையதல்ல என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டு வருகின்றனர்.