பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன் காரணமாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கர் மீது, கஞ்சா வைத்திருந்த வழக்குகளும் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.